2020 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2020 நவம்பர் மாத பொது பலன்கள்
சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நவம்பர் 16, 2020 அன்று பெயருகிறார். மீன ராசியில் வக்கிர கதி அடைந்திருக்கும் செவ்வாய் நவம்பர் 14, 2020 அன்று மீன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைவார். சுக்கிரன் கன்னி ராசியில் நவம்பர் 16, 2020 வரை பலவீனமான நிலையில் சஞ்சரித்து பின்னர் துலாம் ராசிக்கு பெயருவார்.
புதன் நவம்பர் 3, 2020 அன்று துலாம் ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இது சரியாக அமெரிக்க ஜனாதிபதி தேர்வு நடைபெறும் நாள். குரு தனுசு ரையில் இருந்து மகர ராசிக்கு நவம்பர் 2௦, 2020 அன்று பெயருகிறார். குரு தன்னுடைய இடத்தில இருந்து பலவீனமான இடத்திற்கு பெயருவதால் அனைவரது அதிர்ஷ்டத்தில் பெரும் அளவு மாற்றங்கள் ஏற்படும்.
முழு பலத்தோடு சனி பகவான் மகர ராசிக்கு பெயருவார். ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்.
இந்த குரு பெயர்ச்சியில் குரு மற்றும் சனி பகவான் இணைந்து மகர ராசியில் நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்குவார்கள். குரு மற்றும் சனி மகா தசை நடைபெருபவர்களுக்கு தங்கள் பிறந்த சாதகத்தின் அடிப்படையில் அதிர்ஷ்டத்தில் பெரும் அளவு மாற்றங்கள் ஏற்படக் கூடும். கிரகங்கள் வக்கிர நிவர்த்தி அடைந்து இயல்பான வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதால் நவம்பர் 25, 2020 முதல் முடிவுகள் எடுக்கும் விடயங்களில் அதிக தெளிவு உண்டாகும்.
உங்கள் ராசியை தேர்ந்தெடுத்து நவம்பர் 2020-க்கான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.


Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.