2020 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பது நவம்பர் 16, 2020 வரை சிறப்பாக உள்ளது. சுக்கிரன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் முழுவதும் நல்ல பலன்களைத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் நவம்பர் 14, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் சாதகமற்ற பலன்கள் உண்டாகக் கூடும். புதன் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து தொடர்பு குறித்த பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும்.
ராகு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிலும், கேது 4ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து பாதிப்புகளில் இருந்து உங்களை பாதுகாத்து, உங்களுக்கு சிறப்பான வளர்ச்சியைத் தருவார். குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்.


ஆனால் உங்களுக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம் குறுகிய காலத்திற்கு மட்டுமே. நவம்பர் 2௦, 2020 அன்று குரு உங்கள் ராசியின் 6ஆம் வீடான ரூன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயருகிறார். குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், செவ்வாய் 8ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு நவம்பர் 21, 2020 முதல் கசப்பான அனுபவங்களை உண்டாக்கக் கூடும்.
நவம்பர் 2௦, 2020க்கு முன் உங்கள் வாழ்க்கையில் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள். அதன் பின்னர் நவம்பர் 21, 2020 முதல் அடுத்த 4 மாதங்களுக்கு நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள்.


Prev Topic

Next Topic