![]() | 2020 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் சிறப்பாக இல்லை. புதன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்கள் உடல் நலத்தை பாதிக்கக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், 1ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு கலவையான பலன்களை இந்த மாதம் தருவார். ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயர்ந்து, கேது 2ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களுக்கு பின்னடைவுகளை உண்டாக்குவார்கள்.
குரு உங்கள ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களை முதல் சில வாரங்களுக்கு இந்த மாதம் தரக்கூடும். அர்தஷ்டம சனியின் தாக்கம் இந்த மாதம் அதிகமாக உணரப்படும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும், நவம்பர் 14, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். மேலும் குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பிரச்சனைகளின் தாக்கத்தை குறைக்க உதவுவார்.
இந்த மாதமும் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள். ஆனால் பிரச்சனைகளின் தாக்கம் வெகுவாக குறைந்தே இருக்கும். மேலும் நவம்பர் 21, 2020 முதல் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு நீங்கள் இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic