|  | 2020 November நவம்பர் மாத   ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி) | 
| மீன ராசி | கண்ணோட்டம் | 
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் சிறப்பாக இல்லை. புதன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து நவம்பர் 17, 2020 முதல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நிதி நிலையில் வளர்ச்சியை அதிகரிப்பார். ஆனால், கேது உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து சில பின்னடைவுகளை உண்டாக்கக் கூடும். 
செவ்வாய் நவம்பர் 14, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து உங்களுக்கு பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குரு சனி பகவானோடு இணைந்து நவம்பர் 21, 2020 முதல் உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பது தான். 
மேலும் அனைத்து கிரகங்களும் நல்ல நிலையில் நவம்பர் 21, 2020முதல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பெரும் அளவிலான அதிர்ஷ்டம் உண்டாகும். நீங்கள் உங்கள் சோதனை காலத்தில் இருந்து முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள். நவம்பர் 21, 2020க்கு மேல் நீங்கள் எதை செய்தாலும், அதில் பெரும் அளவு வெற்றிப் பெறுவீர்கள், உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் உண்டாகும். பண மழை உங்களுக்கு உண்டாகும். 
நவம்பர் 21, 2020 முதல் ஏப்ரல் 14, 2020 வரையிலான காலகட்டத்தை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள். மொத்தத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிக்கக் கூடும் சிறப்பான மாதமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். 
Prev Topic
Next Topic


















