![]() | 2020 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், நவம்பர் 15, 2020 வரை உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். புதன் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் வக்கிர கதி அடைவதால் சிறப்பான பலன்களை நீங்கள் பெறுவீர்கள். செவ்வாய் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் உங்களுக்கு சாதகமற்ற பலன்கள் உண்டாகலாம்.
ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. சனி பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நிதி நிலையை பாதிக்கக் கூடும். குரு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு நவம்பர் 21, 2020 வரை கசப்பான அனுபவங்களை தரக் கூடும். நவம்பர் 21, 2020 வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் நிதி நிலை மிக மோசமாக பாதிக்கப்படுவதால் உங்கள் நற்பெயர் பாதிக்கப்படலாம். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை நீங்கள் கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
நவம்பர் 21, 2020 வாக்கில் உங்கள் சோதனை காலம் முடிவுக்கு வருகின்றது. ஏழரை சனியின் தாக்கம் குறையும். குரு ராகுவை பார்வை இடுவதால் உங்கள் தன்னம்பிக்கையின் அளவு அதிகரிக்கும். மேலும் உங்கள் அதிர்ஷ்டத்தின் அளவும் அதிகரிக்கும். நவம்பர் 21, 2020 முதல் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வரவிருக்கும் மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக உள்ளதாலும், உங்களது மோசமான காலகட்டம் விரைவாக முடிவடைவதாலும், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic