2020 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் இந்த மாதம் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டிற்கு பெயர்ந்து நல்ல பலனைத் தருவார். புதன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் நாட்கள் நகர நகர நல்ல பலனைத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் நவம்பர் 14, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் அனேக நேரங்களில் நல்ல பலன்களைத் தருவார்.
சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து சில தாமதங்களையும், தடைகளையும் உண்டாக்கக் கூடும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு உடல் உபாதைகளை தரக் கூடும். கேது உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து எதிர்மறை சக்திகளை அதிகரிக்கக் கொடும். ஆனால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் சோதனை காலம் தற்போது முடிவுக்கு வருகின்றது.


நவம்பர் 14, 2020 முதல் நீங்கள் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு மகர ராசிக்கு நவம்பர் 2௦, 2020 அன்று பெயருகிறார். இதனால் சனி பகவானால் ஏற்பட உள்ள பாதிப்புகளை குறைத்து நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார். அதனால் உங்கள் அதிர்ஷ்டத்தில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றம் ஏற்படும். நவம்பர் 21, 2020 முதல் நல்ல பலனை காண்பீர்கள்.
இந்த மாதத்தின் முதல் 2-3 வாரங்களை மட்டும் நீங்கள் கடந்து விட்டால், அனைத்தும் நல்ல நிலைக்கு மாறும். வரவிருக்கும் மாதங்கள் உங்களுக்கு மிக சிறப்பாக இருப்பதால் நீங்கள் நல்ல மகிழ்ச்சியோடு இருக்கலாம். மூச்சு பயிற்சி செய்து நேர்மறை சக்திகளை விரைவாகப் பெறுங்கள்.



Prev Topic

Next Topic