![]() | 2020 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டிற்கு பெயர்ந்து நவம்பர் 15, 2020 முதல் நல்ல பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசி மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த அமாதம் முழுவதும் நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார். புதன் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல நண்பர்கள் மூலம் உங்களுக்கு நிம்மதியான சூழலைத் தருவார். கேது உங்களுக்கு நல்ல பலன்களைத் தந்தாலும், ராகு சிறிய விடயத்தையும் கூட சிக்கலாக்கி விடுவார்.
செவ்வாய் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. இதனால் உங்கள் உறவுகளுடன் இருக்கும் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் மன வலியையும், கவலையையும் மேலும் அதிகரிக்கக் கூடும். நவம்பர் 2௦, 2020 வரை குருவிடம் இருந்து எந்த பலன்களையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பின் நவம்பர் 21, 2020 முதல் உங்கள் சொந்த வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளில் நீங்கள் பெரும் அளவு நிவாரணத்தை காணலாம்.
குரு உங்கள் ஜென்ம ராசியை 7 ஆண்டுகளுக்கு பிறகு பார்வை இடுவது சிறப்பான செய்தியாகும். இந்த மாதத்தின் முதல் சில வாரங்கள் நீங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், நவம்பர் 21, 2020க்கு பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
Prev Topic
Next Topic