2020 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களால் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. கேது உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கும், ராகு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கும் பெயருவதால், சில தாமதங்கள் ஏற்படக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். புதன் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்.
செவ்வாய் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் பாதிக்கக் கூடும். குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து சனி பகவானுக்கு எதிராக செயல்பட்டு நல்ல வளர்ச்சியையும், வெற்றியையும் உங்களுக்கு உண்டாக்குவார்.


தற்போது நீங்கள் ஏழரை சனி காலத்தில் இருகின்றீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். எனினும், அடுத்த 7 வாரங்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள். என்னென்றால் நவம்பர் 21, 2020க்கு மேல் நீங்கள் நீண்ட காலத்திற்கு சோதனை காலத்தில் இருப்பீர்கள்.


Prev Topic

Next Topic