2020 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டிற்கு பெயருவது இந்த மாதம் சிறப்பாக இல்லை. நீங்கள் இதனால் எந்த அதிர்ஷ்டத்தையும் எதிர் பார்க்க முடியாது. ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு அதிக செலவுகளை உண்டாக்கக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல பலன்களைத் தருவார். உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் வக்கிர கதி அடையும் புதன் அதிக அழுத்தத்தை உத்தியோகத்தில் தருவார்.
குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் செலவுகளை தொடர்ந்து அதிகரிப்பார். சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்கள் உத்தியோக வாழ்க்கையை பாதிப்பார். கேது உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு சில உதவிகளை செய்வார். ஜென்ம சனியின் தாக்கத்தை இந்த மாதம் நீங்கள் கடுமையாக உணருவீர்கள்.


இது உங்களுக்கு மற்றுமொரு சவால் நிறைந்த மாதமாக இருக்கும். அடுத்த 6 மாதங்களுக்கு எந்த நல்ல மாற்றங்களையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நீங்கள் எதை செய்ய வேண்டும் என்றாலும் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செய்வது நல்லது. உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு ஜென்ம சனியின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.


Prev Topic

Next Topic