![]() | 2020 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அக்டோபர் 17, 2020 முதல் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் வக்கிர கதி அடையும் செவ்வாய் உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். புதன் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவதால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.
ராகு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிலும், கேது 4ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியில் சில பின்னடைவுகளை உண்டாக்கக் கூடும். எனினும், சனி பகவான் ராகுவால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார். குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்.
நீங்கள் செய்யும் அனைத்து விடயங்களிலும் உங்களுக்கு பெரும் அளவு வெற்றி உண்டாகும். இந்த காலகட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள். இந்த ஆண்டிலேயே, இந்த மாதம் உங்களுக்கு சிறந்த மாதமாக இருக்கும்.
Prev Topic
Next Topic