![]() | 2020 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் உங்களால் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. உங்கள் ஜென்ம ராசியில் வக்கிர கதி அடையும் புதன் உங்கள் உடல் நலத்தை பாதிக்கக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து அக்டோபர் 23, 2020 வரை உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவதால் உங்கள் குடும்பத்திலும், அலுவலகத்திலும் சில கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும்.
ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், கேது 2ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு சில பின்னடைவுகளை உண்டாக்கக் கூடும். குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நிதி குறித்த பிரச்சனைகளை உண்டாக்கக் கொடும். மேலும் விடயங்களை மோசமாக்கும் விதமாக சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீடான அர்தஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து பிரச்சனைகளை உண்டாக்குவார். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இப்போது ஒரு கடினமான சோதனை காலத்தில் இருப்பீர்கள்.
எந்த விதமான ரிஸ்க்கையும் எடுப்பதை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து முக்கிய முடிவுகள் எடுப்பது நல்லது. உங்கள் பிறந்த சாதகத்தை பார்த்து ஏதேனும் உதவும் வகையில் பலன்கள் இருகின்றதா என்று பார்ப்பது நல்லது. உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்யுங்கள். நவம்பர் 21, 2020 முதல் உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் குறையும்.
Prev Topic
Next Topic