![]() | 2020 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து அக்டோபர் 16, 2020 வரை நல்ல பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். புதன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை மீண்டும் உண்டாக்குவார். உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் வக்கிர கதி அடையும் செவ்வாய் உங்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய உதவியாக இருப்பார்.
உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் கேது மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் ராகு உங்களுக்கு சாதகமான பலன்களை தருவது சந்தேகமே. எனினும், ராகு மற்றும் கேதுவிடம் இருந்து தற்போது பெரிதாக எந்த பிரச்சனைகளும் உண்டாகாது. குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பெரும் அளவு அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார். உங்களுக்கு விண்ணைத் தொடும் அளவு அதிர்ஷ்டம் உண்டாகும். சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்.
உங்கள் வாழ்க்கையில் இது ஒரு மிகச் சிறந்த மாதமாக இருக்கும். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள். இந்த மாதத்தின் இறுதி பகுதியில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முடிந்த வரை புண்ணிய காரியங்கள், தானம் மற்றும் தர்மம் செய்ய முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic