![]() | 2020 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர் |
முகப்பு | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் செப்டம்பர் 16, 2020 அன்று சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயருகிறார். செவ்வாய் மேஷ ராசியில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரித்தாலும், செப்டம்பர் 1௦, 2020 அன்று வக்கிர கதி அடைகிறார். சுக்கிரன் கடக ராசியில் இந்த மாதம் செப்டம்பர் 28, 2020 வரையில் சஞ்சரிப்பார். புதன், இந்த மாதம் சிம்மம், கன்னி மற்றும் துலாம் ராசியில் விரைவாக பெயர்ந்து சஞ்சரிப்பார்.
வக்கிர கதி அடைந்த புதன் செப்டம்பர் 13, 2020 அன்று தனுசு ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். வக்கிர கதி அடைந்த சனி பகவான் செப்டம்பர் 29, 2020 அன்று மகர ராசியில் வக்கிர நிவர்த்தி அடைவார். மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு ராகு செப்டம்பர் 25, 2020 அன்று பெயருவார். அதே நேரம் கேது தனுசு ராசியில் இருந்து விரிச்சிக ராசிக்கு பெயருவார்.
அனைத்து முக்கிய கிரகங்களான சனி பகவான், குரு, ராகு மற்றும் கேது குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் செய்வதாலும், செவ்வாய் இந்த மாதம் வக்கிர கதி அடைவதாலும், இந்த மாதம் அதிர்ஷ்டம் குறித்த விடயங்களில் அனேகமானவர்கலுக்கு ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போலவே வாழ்க்கை இருக்கக் கூடும். ஒவ்வொரு நாளும், உங்கள் அதிர்ஷ்டத்தில் நீங்கள் எதிர்மாராத திடீர் மாற்றங்களை காண்பீர்கள்.
பங்குச்சந்தை குறித்த விடயங்களில் திட்டமிடுவது அனைவருக்கு ஒரு மோசமான நேரத்தை குறிக்கக் கூடும். இது குறிப்பாக ஒரு நாள் நீங்கள் லாபத்தை பார்த்தால், அடுத்த நாளே உங்கள் அதிர்ஷ்டம் மாறுவதால் அதனை நீங்கள் இழக்க நேரிடலாம். மேலும் இந்த மாதம் பங்கு சந்தை வர்த்தகத்தில் பங்குகளை வாங்கி வைத்துக் கொள்ள நினைப்பதும் சரியான யோசனையாக இருக்காது
Prev Topic
Next Topic