2020 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமாக இல்லை. சுக்கிரன் உங்கள் ராசியின் 12ஆம் வீடான விரிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு செலவுகளை உண்டாக்கக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். விரைவாக நகரும் புதன் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்.
ராகு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிலும், கேது 4ஆம் வீட்டிலும் செப்டம்பர் 25, 2020 முதல் சஞ்சரித்து உங்களுக்கு சில பின்னடைவுகளை உண்டாக்கக் கூடும். சனி பகவான் செப்டம்பர் 29, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார். குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு பெரும் அளவிலான வளர்ச்சியையும், வெற்றியையும் பெற்றுத் தருவார்.


மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு நேர்மறை சக்திகள் மிக அதிகமாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து வரவிருக்கும் அடுத்த சில மாதங்களுக்கு இந்த அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கலாம். இந்த காலகட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள்.


Prev Topic

Next Topic