![]() | 2020 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
செப்டம்பர் 16, 2020க்கு மேல் சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. விரைவாக நகரும் புதன் உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். உங்களால் சுக்கிரன் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த பலன்களையும் எதிர் பார்க்க முடியாது. செவ்வாய் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பதற்றத்தை அதிகரிப்பார்.
ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், கேது 2ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது, மேலும் சில பின்னடைவுகளை உண்டாக்கக் கூடும். குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களை உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களது அனைத்து விடயங்களையும் மோசமாக்கி விடக் கூடும். எதிர்பாராவிதமாக, செப்டம்பர் 16, 2020 முதல் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள். இது ஒரு நீண்ட காலகட்டமாகவும் இருக்கும்.
எந்த ரிஸ்கும் எடுப்பதை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. எந்த முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பும், ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செயல்படுவது நல்லது. எந்த விடயமாக இருந்தாலும் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து பின்னர் செயல்படுவது நல்லது. இந்த சோதனை காலத்தை கடக்க நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது.
Prev Topic
Next Topic