2020 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

கண்ணோட்டம்


செப்டம்பர் 16, 2020 முதல் சூரியன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதமும் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். விரைவாக நகரும் புதன் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான செய்திகளை கொண்டு வருவார்.
கேது உங்கள் ஜென்ம ராசிக்கும், ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயருவது சிறப்பாக இல்லை. எனினும், ராகு மற்றும் கேதுவால் எந்த பிரச்சனைகளும் தற்போது ஏற்படாது. குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு சிறப்பான வளர்ச்சியும், வெற்றியும் உண்டாகும். மேலும் சனி பகவான் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், பெரும் அளவு லாபத்தையும் தருவார்.


உங்கள் வாழ்க்கையிலேயே இந்த மாதம் ஒரு சிறப்பான காலகட்டமாக இருக்கும். வரவிருக்கும் மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் நீங்கள் செட்டிலாகி விட முயற்சிக்கலாம்.


Prev Topic

Next Topic