![]() | 2021 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
ஏப்ரல் 2021 மிதுன ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் முழுவதும் நீங்கள் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். சுக்கிரன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 1௦, 2021அன்று பெயருவதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். கேது உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் உத்தியோகம் குறித்த விடயங்களில் சிறப்பான பலன் உண்டாகும். புதன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாகும்.
ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு மனக் கவலை உண்டாகலாம். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு பதற்றத்தை உண்டாக்குவார். குரு உங்கள் ஜென்ம ராசியை ஏப்ரல் 5, 2021 முதல் பார்வை இடுகிறார். இதனால் உங்கள் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும். மேலும் அஷ்டம சனியின் தாக்கமும் குறைவாகவே இருக்கும்.
மொத்தத்தில் நேர்மறை சக்த்தியின் அளவு இந்த மாதம் நாட்கள் நகர நகர அதிகரித்துக் கொண்டே போகும். இந்த மாதத்தின் இறுதியில் உங்களுக்கு ஏற்படும் முன்னேற்றங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நேர்மறை சக்த்தியை நீங்கள் விரைவாக அதிகரித்துக் கொள்ள மூச்சு பயிற்சி செய்யலாம்.
Prev Topic
Next Topic



















