2021 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2021 ஏப்ரல் மாத பலன்கள்
• உச்சம் பெற்ற சுக்கிரன் இந்த மாதத்தின் தொடக்கத்தில் மீன ராசியில் சஞ்சரித்து, அதன் பின்னர் ஏப்ரல் 10, 2021 அன்று மேஷ ராசிக்கு பெயருகிறார்.
• சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு ஏப்ரல் 14, 2021 அன்று பெயருகிறார்


• புதன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு ஏப்ரல் 17, 2021 அன்று பெயருகிறார்
• செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு ஏப்ரல் 14, 2021 அன்று பெயருகிறார்
• ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்


சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து மேஷ ராசியில் ஏப்ரல் 17, 2021 முதல் இந்த மாதம் இறுதி வரை சஞ்சரிப்பார்கள். ஏப்ரல் 5, 2021 அன்று சனி பகவான் மற்றும் குரு இணைந்து சஞ்சரித்த சஞ்சாரம் முடிவுக்கு வருகிறது, அதன் பின்னர் குரு கும்ப ராசிக்கு பெயருகிறார்.
ஏப்ரல் 5, 2021 முதல் ஏப்ரல் 14, 2021 வரை குரு அடுத்த ராசிக்கு பெயரும் போது சக்தி வாய்ந்த குரு மங்கள யோகத்தில் இடைவெளி ஏற்படுகிறது. ஜென்ம ராசி மற்றும் பிறந்த சாதக பலனை சார்ந்து இருப்பவர்கள் குறிப்பிடத்தக்க (நேர்மறை மற்றும் எதிர்மறை) மாற்றங்களைப் பெறுவார்கள்.

Prev Topic

Next Topic