![]() | 2021 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
ஏப்ரல்2021 மீன ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. சுக்கிரன் உச்சம் பெறுவதால் நலல் அதிர்ஷ்டத்தை நீங்கள் பெறுவீர்கள். புதன் இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். செவ்வாய் மற்றும் ராகு இணைந்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்கள்.
சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து தொடர்ந்து உங்களுக்கு நீண்ட கால வளர்ச்சியில் நல்ல சிறப்பான உதவிகளை செய்வார். குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் செலவுகளை அதிகரிப்பார். ஆனால், அது உங்களது நீண்ட கால வளர்ச்சியையும் அல்லது வெற்றியின் அளவையும் பாதிக்காது. அதிகரிக்கும் செலவுகள் உங்கள் நிதி நிலையை சற்று தாக்கக் கூடும்.
கடந்த மாதத்தை விட இந்த மாதம் சற்று வேகம் குறைந்து காணப்படும். இருப்பினும், நீங்கள் மிதமான அளவிலாவது வெற்றியை பெற்றுக் கொண்டிருப்பீர்கள். சனி பகவான் மே 14, 2021 அன்று வக்கிர கதி அடைவதால், உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படலாம். அடுத்த 6 வாரங்களை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாக முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic



















