![]() | 2021 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
ஏப்ரல் 2021 ரிஷப ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், இந்த மாதத்தின் முதல் பாதியில் மட்டுமே நீங்கள் நல்ல பலனை எதிர்பார்க்க முடியும். உச்சம் பெற்ற சுக்கிரன் ஏப்ரல் 1௦, 2021 வரை உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். புதன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு பெயருவதால் ஏப்ரல் 17, 2021 முதல் அதிக ஏமாற்றங்கள் உங்களுக்கு உண்டாகலாம். ராகு உங்கள் ஜென்ம ராசியிலும், கேது களத்திர ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம்.
எதிர்பாராவிதமாக, குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயர்வதால் உங்கள் உத்தியோக வாழ்க்கையை பெரிதும் பாதிக்கப்படும். மேலும் இந்த குரு பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையின் பல விடயங்கள் பாதிக்கப்படலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
செவ்வாய் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் முழுவதும் உங்கள் வளர்ச்சி பாதிக்கக் கூடும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு ஒரு கடுமையான சோதனை காலமாக இருக்கும். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து, சுதர்சன மகா மந்திரம் கேட்ட வந்தால் சற்று ஆறுதலான சூழ்நிலை உண்டாகும். பெருமாளை வணங்கி நிதி நிலையில் பெரும் அளவு வெற்றிப் பெறுங்கள்.
Prev Topic
Next Topic



















