![]() | 2021 August ஆகஸ்ட் மாத உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | உடல் நலம் |
உடல் நலம்
செவ்வாய் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் உடல் நலம் பாதிக்கப்படாது, ஆனால் மனதளவில் நீங்கள் பலவீனமானவராக இருப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கையின் அளவு குறையலாம். கேது உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தை உண்டாக்குவார். அறுவைசிகிச்சை செய்து கொள்ள இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் அப்படி செய்ய முயற்சித்தால், வழக்கமான நேரத்தை விட நீங்கள் குணமடைய அதிக காலம் ஆகலாம்.
விளையாட்டின் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வம் குறையக்கூடும். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். போதிய மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்வது நல்லது. செவ்வாய்க் கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபட்டு, ஞாயிறு தோறும் ஆதித்ய ஹிருதயம் கேட்டு வருவதால் சற்று ஆறுதலான சூழல் நிலவும்.
Prev Topic
Next Topic



















