![]() | 2021 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
ஆகஸ்ட் 2021 சிம்ம ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டிற்கு பெயருவதால் இந்த மாதம் நீங்கள் சாதகமான பலனை எதிர்பார்க்க முடியாது. சுக்கிரன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். ஆனால் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசிக்கு பெயர்ந்து உங்களுக்கு அதிக பதற்றத்தையும், கோபத்தையும் இந்த மாதம் முழுவதும் உண்டாக்கக் கூடும். இந்த மாதத்தின் மத்தியில் புதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
ராகு மற்றும் கேது உங்கள் ராசியின் 10 மற்றும் 4ஆம் வீட்டில் சாதகமற்ற நிலையில் சஞ்சரிக்கின்றார்கள். உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்த சனி பகவானும் சிறப்பான நிலையில் இல்லை. ஆனால் வக்கிர கதி அடைந்த குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கலவையானப் பலன்களைத் தருவார். நீங்கள் எதை செய்தாலும் அதில் வெற்றிப் பெற முடியாத நிலை ஏற்படலாம். எந்த நல்ல முன்னேற்றமும் இல்லாமல் விடயங்கள் தேக்கம் அடையலாம்.
மொத்தத்தில் நேர்மறை சக்திகளை விட எதிர்மறை சக்திகள் அதிகமாக இருக்கும். நீங்கள் இந்த மாதம் எந்த ரிஸ்க்கையும் எடுக்காமல் இருப்பது நல்லது. மூச்சு பயிற்சி செய்து நீங்கள் நேர்மறை சக்திகளை வேகமாக அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கலாம்.
Prev Topic
Next Topic



















