![]() | 2021 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
பெப்ரவரி 2021 கும்ப ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் இருந்து 1ஆம் வீட்டிற்கு சஞ்சரிப்பதால், இந்த மாதம் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. சுக்கிரன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியை முதல் சில வாரங்கள் பாதிக்கக் கூடும். உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்த புதன் அதிக தாமதங்களையும், தொடர்பு குறித்த பிரச்சனைகளையும் உண்டாக்கக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல பலனை பெப்ரவரி 21, 2021 வரை தருவார்.
ராகு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பாதகமான பலன்களைத் தரக்கூடும். கேது உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உத்தியோகத்தில் நிலையற்ற தன்மையை உண்டாக்குவார். சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களை தரக் கூடும். கிரகங்கள் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் குருவுடன் இணைந்து சஞ்சரித்து உங்கள் நிதி நிலையை பாதிப்பார்கள்.
முதலீடுகளில் நீங்கள் ஒரு பெரும் தொகையை இழக்க நேரலாம். நீங்கள் உங்கள் நிதி குறித்த முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பங்கு சந்தை வர்தகத்தை விட்டு முற்றிலுமாக விலகி விடுவது நல்லது. பெப்ரவரி 8 – 11, 2021 வரை நீங்கள் தூக்கத்தை இழக்க நேரலாம், இது குறிப்பாக 6 கிரகங்கள் உங்கள் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஏற்படும்.
Prev Topic
Next Topic



















