![]() | 2021 February பிப்ரவரி மாத காதல் ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | காதல் |
காதல்
இந்த மாதம் முழுவதும் சுக்கிரன் சிறப்பான நிலையில் சஞ்சரிக்கின்றார். இதனால் நீங்கள் விரும்புபவருடன் நீங்கள் அதிக நேரம் செலவு செய்ய முடியும். ஆனால் சாதகமற்ற செவ்வாய் மற்றும் சனி பகவானின் சஞ்சாரத்தால் கடுமையான வாக்குவாதங்கள் உங்கள் இருவருக்கும் இடையே ஏற்படலாம். இறுதியாக, இது உங்கள் காதல் உறவில் ஒரு கசப்பான அனுபவத்தை உண்டாக்கக் கூடும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தை பார்வை இடுவதால் உங்கள் தூக்கம் பாதிக்கக் கூடும். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் பெறுவது மிகக் கடினமான ஒன்றாக இருக்கும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் காதலால் இரு வீட்டார்களோ குடும்பத்தினர்களுக்கும் இடையே சண்டைகள் ஏற்படலாம்.
திருமணம் ஆன தம்பதியினர் அன்யுனியம் குறைந்து காணப்படுவார்கள். அடுத்த 1௦ வாரங்களுக்கு குழந்தை பேறுக்கு திட்டமிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. IVF அல்லது IUI போன்ற மருத்துவ சிகிச்சைகளை தவிர்த்து விடுவது நல்லது. அது உங்களுக்கு ஏமாற்றத்தை தரலாம். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், ஏப்ரல் 2021 இரண்டாம் வாரம் வரை காத்திருப்பது நல்லது. பெப்ரவரி 13/ 14, 2021 வாக்கில் உங்களுக்கு சாதகமற்ற செய்திகள் வரலாம்.
Prev Topic
Next Topic



















