![]() | 2021 February பிப்ரவரி மாத வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
கடந்த ஜனவரி 2021 மாதம் நீங்கள் அதிக பணத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இழந்து இருப்பீர்கள். பங்கு சந்தை வர்த்தகத்தில் தொடர்ந்து இழப்புகள் ஏற்படலாம். விடயங்கள் பெப்ரவரி 21, 2021க்கு பிறகு சற்று முன்னேற்றம் பெறலாம். ஆனால், பெப்ரவரி 21, 2021க்கு முன் நீங்கள் முதலீடுகள் செய்ய முயற்சிப்பதை தவிர்த்து விடுவது நல்லது. அது உங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தி விடக்கூடும்.
நீங்கள் நீண்ட கால முதலீடுகள் செய்பவராக இருந்தால், கவனமாக செயல்படுவது நல்லது. எந்த விதமான ரியல் எஸ்டேட் முதலீடுகளையும் தவிர்த்து விடுவது நல்லது. அதற்கு இது ஏற்ற நேரம் இல்லை. அதிர்ஷ்ட சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. அதற்கு நீங்கள் அடிமையாகி, பணத்தை இழக்க நேரலாம். ஏப்ரல் 5, 2021 வரை வங்கி சேமிப்பு, நிரந்தர வைப்பு நிதி போன்ற பாதுகாப்பான முதலீடுகளை செய்வது நல்லது.
Prev Topic
Next Topic



















