![]() | 2021 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
பெப்ரவரி 2021 மிதுன ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த நல்ல பலனையும் எதிர் பார்க்க முடியாது. சுக்கிரன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல உதவிகளை செய்வார். உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் வக்கிர கதி அடையும் புதன் உங்களுக்கு தொடர்பு குறித்த பிரச்சனைகளை உண்டாக்குவார். செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து பெப்ரவரி 21, 2021 வரை நல்ல உதவிகளை செய்வார். ஆனால் பெப்ரவரி 21, 2021க்கு மேல் செவ்வாய் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
செவ்வாய் மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படலாம். சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்களுக்கு கசப்பான அனுபவத்தை தரக் கூடும். எதிர்பாராவிதமாக, திடீர் பின்னடைவுகள் பெப்ரவரி 8, 2021 முதல் பெப்ரவரி 11, 2021 வரை நடக்கலாம். இது குறிப்பாக கிரகங்கள் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் இணைந்து சஞ்சரிப்பதால் நடக்கும். பெப்ரவரி 22, 2021 வாக்கில் விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கலாம்.
அடுத்த 9 வாரங்களுக்கு எந்த முக்கிய முடிவுகளும் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு நீங்கள் இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். மார்ச் 2021 இறுதி வாக்கில் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
Prev Topic
Next Topic



















