![]() | 2021 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
ஜனவரி 2021 கும்ப ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார், சுக்கிரன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். புதன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு அதிக தாமதங்களையும், தொடர்பு குறித்த பிரச்சனைகளையும் உண்டாக்கக கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார்.
ராகு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சாதமற்ற பலனைத் தரக் கூடும். கேது உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உத்தியோகத்தில் நிலை இல்லாத சூழலை உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு அதிக தடைகளையும், ஏமாற்றங்களையும் இந்த் மாதம் உண்டாக்கக் கூடும். குரு சனி பகவானோடு இணைந்து சஞ்சரிப்பதால் அதிக நிதி பிரச்சனைகள் ஏற்படலாம்.
முதலீடுகளால் நீங்கள் பெரும் அளவு பணத்தை இழக்க நேரலாம். நீங்கள் கவனமாக இருந்து நிதி குறித்த முடிவுகளை எடுக்க வேண்டும். குறிப்பாக பங்கு சந்தை வர்த்தகத்தை விட்டு முற்றிலுமாக விலகி இருக்க வேண்டும். ஜனவரி 14, 2021 வாக்கில் உங்கள் ராசியின் 12ஆம் வீடு 5 கிரகங்களால் பாதிக்கபடுவதால், நீங்கள் தூக்கம் இல்லாத இரவுகளை கழிக்க நேரலாம்.
Prev Topic
Next Topic



















