![]() | 2021 January ஜனவரி மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
எதிர்பாராவிதமாக, நீண்ட காலத்திற்கு நீங்கள் ஒரு சாதகமற்ற காலகட்டத்தை கடக்க வேண்டும். சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியை பாதிக்கக் கூடும். மேலும் விடயங்களை மோசமாக்கும் விதமாக, குரு சனி பகவானோடு இணைந்து உங்கள் பிரச்சனைகளின் தாக்கத்தை அதிகரிக்கக் கூடும். அடுத்த குரு பெயர்ச்சி உங்கள் ஜென்ம ராசியில் நடை பெறுவதால், உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கும். நீங்கள் அடுத்த 15 மாதங்களுக்கு ஏப்ரல் 2022 வரை நடை பெற உள்ள இந்த கடினமான சூழலை சந்திக்க உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்கின்றீர்கள் என்றால், அங்கேய அடுத்த ஆண்டு வரையாவது இருந்து விட முயற்சி செய்யுங்கள்.
அலுவலகத்தில் அரசியல் மற்றும் சதிகள் அதிகரிப்பதால் நீங்கள் பாதிக்கப்படலாம். நீங்கள் நிர்வாகத்தின் கீழ் வேலை பார்கின்றீர்கள் என்றால், உயர் பதவியில் இருக்கும் நிர்வாகிகள் செய்யும் அரசியலால் நீங்கள் பாதிக்கப்படலாம். நீங்கள் அவமானப்படும் சூழல் ஏற்பட்டு, உங்கள் உத்தியோகத்தை நீங்கள் ராஜினாமா செய்து விட நினைப்பீர்கள். அதிகரிக்கும் வேலை பளு மற்றும் பதற்றத்தால் உங்கள் மன நிம்மதி பாதிக்கக் கூடும். உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கப்படும். நீங்கள் உங்கள் உடல் நலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இடமாற்றும், இன்சூரன்ஸ் போன்ற பலன்களை உங்கள் நிறுவனத்தில் இருந்து எதிர்பார்ப்பதை தவிர்த்து விடுவது நல்லது.
உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், எந்த பலனும் இன்றி நீங்கள் உத்தியோகத்தை இழக்க நேரலாம். நீங்கள் இப்போது உங்கள் உத்தியோகத்தை இழந்தால், அதன் பிறகு ஒரு நல்ல வேலை மீண்டும் கிடைக்க நீண்ட காலம் ஆகலாம். அப்படி இல்லை என்றால், நீங்கள் தற்காலிகமாகவோ அல்லது ஒப்பந்தம் ரீதியாகவோ அடுத்த 12 முதல் 18 ஒரு வேலையை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். ஜனவரி 14, 2021 வாக்கில் உங்களக்கு சாதகமற்ற செய்திகள் வரலாம்.
Prev Topic
Next Topic



















