![]() | 2021 January ஜனவரி மாத குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
உங்களுக்கு கடந்த மாதம் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். எதிர்பாராவிதமாக விடயங்கள் இந்த மாதமும் மோசமாகக் கூடும். விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கலாம். நீங்கள் இதனால் பீதி அடையும் நிலைக்கு செல்லக்கூடும். உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு கடுமையான சண்டைகள் ஏற்படக் கூடும். சுப காரியங்கள் நடத்த இது ஏற்ற நேரம் இல்லை.
ஜனவரி 23, 2021 வாக்கில் நீங்கள் உங்கள் உறவினர்கள் முன் அவமானப்படும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அரசியலும், சதிகளும் அதிகரிக்கும். ஏப்ரல் 2021 முதல் வாரம் வரை காத்திருந்து அதன் பின்னர் முக்கிய முடிவுகள் எடுக்க முயற்சிப்பது நல்லது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிய நேரலாம். உங்கள் குடும்பத்தினர்களுடன் சட்ட பிரச்சனைகளில் ஈடுபடுவது இப்போது நல்லதல்ல.
நீங்கள் பொறுமையாக இருக்க முயற்சித்து, இந்த கடுமையான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். ஜனவரி 4, 2021 முதல் ஜனவரி 28, 2021 வரையிலான காலகட்டத்தில் மிகவும் கவனமாக நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் மீது தவறு இல்லை என்றாலும், நீங்கள் குற்றம் சாட்டப்படலாம்.
Prev Topic
Next Topic



















