![]() | 2021 January ஜனவரி மாத நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
ஜென்ம குரு மற்றும் ஜென்ம சனி அதிகரிக்கும் கடனால் உங்களுக்கு பீதி அடையும் நிலையை உண்டாக்குவார்கள். செலவுகள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கலாம். உங்கள் கிரெட்டி கார்டு வட்டி விகிதம் அதிக அளவிற்கு மாற்றி அமைக்கப்படலாம். உங்களுக்கு கடன் கொடுத்தவர்கள், வீட்டுக் கடன் அல்லது நில உரிமையாளர்களுக்கு பணம் கொடுக்க உங்களிடம் போதிய பணம் இருப்பு இல்லாமல் போகலாம். முக்கிய கிரகங்கள் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு கடன் கிடைக்காமல் போகலாம்.
உங்கள் நிதி நிலையை சமாளிக்க நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களின் உதவியை சார்ந்து இருக்க வேண்டிய தேவை ஏற்படலாம். இந்த மாதம் தேவையற்ற பயணம் மற்றும் அதிகரிக்கும் மருத்துவ செலவுகளால் நீங்கள் அதிக செலவுகள் செய்ய நேரும். மேலும், தாமதமாக தவணைகள் செலுத்துவதால், அபராதம் செலுத்த வேண்டிய தேவை ஏறப்டலாம். உங்களுக்கு வருமான வரி பிரச்சனைகளும் ஏற்படலாம்.
பண விடயங்களில் நீங்கள் முகவும் நம்பியவர்களே உங்களை ஏமாற்றக் கூடும். அதிகரிக்கும் நிதி பிரச்சனைகள் உங்கள் மன நிம்மதி மற்றும் தூக்கத்தை முற்றிலும் பாதித்து விடக் கூடும். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் இருந்து நீங்கள் பணம் கடன் வாங்கி இருந்தால், ஜனவரி 21, 2021 வாக்கில் அவமானப்படும் சூழல் ஏற்படலாம். அடுத்த 12 வாரங்களுக்க்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையின் கடுமையான காலகட்டத்தை கடக்க வேண்டும்.
Prev Topic
Next Topic



















