![]() | 2021 January ஜனவரி மாத வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
கடந்த மாதம் நான் குறிப்பிட்டது போல, முதலீடுகள் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. அனைத்து கிரகங்களும் உங்களுக்கு எதிராக சஞ்சரித்து உங்கள் சொத்துகளை பாதித்துவிடும். உங்கள் வாழ்நாள் சேமிப்பையும் கூட நீங்கள் எதிர்பாராத நேரத்தில் இழந்து விட நேரலாம். எதிர்மறை சக்திகளின் அளவு மிகவும் அதிகமாக இந்த மாதம் இருக்கும். அதனால் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படும். பங்கு சந்தை வர்தகத்தை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது.
எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளையும் தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக வங்கி சேமிப்பு, அரசு பத்திரம் போன்றவற்றிற்கு மாற்றி விடுவது நல்லது. உங்கள் மகா தசை சாதகமாக இருந்தாலும், நீங்கள் மோசமாக பாதிக்கக் கூடும்.
கடவுள் வழிபாடு, சோதிடம் மற்றும் கலியுகத்தின் தாக்கத்தை இந்த மாதம் உணருவீர்கள். உங்களுக்கு அதிகப்படியான கடன் இருந்தால், உங்களுக்கு வரும் வருமானத்தை கொண்டு அதனை அடைத்து விட முடியாமல் போகலாம். அதனால் உங்கள் கடனை அடைக்க நீங்கள் உங்கள் சொத்துகளை விற்க முயற்சிக்கலாம். ஆனால், மீண்டும் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. மேலும், உங்களால் உங்கள் சொத்துக்களை நல்ல விலைக்கு விற்க முடியாமல் போகலாம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
Prev Topic
Next Topic



















