2021 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2021 ஜனவரி மாத பொது பலன்கள்
சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு ஜனவரி 4, 2021 அன்று பெயருகிறார். மேலும் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு ஜனவரி 28, 2021 அன்று பெயருகிறார்.
சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு ஜனவரி 15, 2021 அன்று பெயருகிறார். புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு ஜனவரி 5, 2021 அன்று பெயருகிறார், மீண்டும் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு ஜனவரி 25, 2021 அன்று பெயருகிறார். மேலும் புதன் ஜனவரி 3௦, 2021 அன்று வக்கிர கதி அடைகிறார்.
செவ்வாய் தனது ராசியான மேஷ ராசியில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார். ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்.
குரு மற்றும் சனி பகவான் டிசம்பர் 21, 202௦ அன்று மகர ராசியில் இணைந்து சஞ்சரிக்கின்றனர். குரு விரைவாக நகர்ந்தாலும், குரு மற்றும் சனி பகவான் ஒரே ராசியில் சஞ்சரிக்கின்றனர். ஆனால், குரு மற்றும் சனி பகவானுக்கும் இடையே இருக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகும்.
சனி பகவான் ஜனவரி 13, 2021 வாக்கில் சாதகமற்ற நிலையில் செவ்வாயுடன் சஞ்சாரம் செய்கிறார். குரு ஜனவரி 2௦, 2021 வாக்கில் சாதகமற்ற நிலையில் செவ்வாயுடன் சஞ்சாரம். சுவாரசியமான விதத்தில் அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பும் ஜனவரி 2௦, 2021 அன்று நடை பெறுகிறது.
சனி பகவான் மற்றும் குரு நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்கும் போது, குரு மற்றும் சனி பகவான் ஜனவரி 19, 2021 முதல் ஜனவரி 31, 2021 வரையிலான காலகட்டத்தில் அஷ்டம (combust) நிலையில் காணப்படுகின்றனர்.
மேலும் ஜனவரி 14 மற்றும் ஜனவரி 15, 2021 அன்று 5 கிரகங்கள் மகர ராசியில் இணைகின்றனர். சந்திரன், சூரியன், புதன், சனி பகவான் மற்றும் குரு ஆகிய ஐந்து கிரகங்களாகும். இதே ஐந்து கிரகங்களும் டிசம்பர் 26, 2019 அன்று தனுசு ராசியில் கோவிட்-19 இந்த உலகத்தை தாக்கத் தொடங்கிய நேரத்தில் இணைந்து சஞ்சரித்தது உங்களுக்கு நினைவுள்ளதா.
மொத்தத்தில் பல நிகழ்வுகள் இந்த பிரபஞ்சத்தில் ஜனவரி 2021 மாதம் நிகழ உள்ளதால், அதிக சுவாரசியமான காலகட்டமாக இந்த மாதம் இருக்கும். ஆனால் பெப்ரவரி 2021 முதல் இத்தகைய பெரிய அளவிலான முக்கிய கிரகங்களின் இணைந்த சஞ்சாராம் விலகத் தொடங்கும்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.