![]() | 2021 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
ஜூலை 2021 துலாம் ராசிப் பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலனை ஜூலை 16, 2021 க்கு மேல் தருவார். புதன் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியை ஜூலை 25, 2021 க்கு மேல் தருவார். ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், கேது 2ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், எந்த பலனையும் எதிர்பார்க்க முடியாது.
சுக்கிரன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் ஜூலை 17, 2021க்கு மேல் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து ஜூலை 2௦, 2021 க்கு மேல் உங்களுக்கு அலுவலகத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வருவார். சனி பகவான் மற்றும் குரு வக்கிர கதி அடைந்து உங்களுக்கு கலவையானப் பலனைத் தருவார்கள்.
இந்த மாதத்தின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால், இந்த மாதம் நாட்கள் முன்னேற, உங்கள் நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். ஜூலை 1௬, 2021 முதல் நீங்கள் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். இந்த மாதத்தின் இறுதி வாரம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.
Prev Topic
Next Topic



















