![]() | 2021 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர் |
முகப்பு | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2021 ஜூன் மாத பலன்கள்
• சூரியன் ஜூன் 15, 2021 அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயருகிறார்
• மே 29, 2021 அன்று மிதுன ராசியில் வக்கிர கதி அடைந்த புதன், ஜூன் 3, 2021 அன்று ரிஷப ராசிக்கு மீண்டும் பெயருகிறார். அதன் பின்னர் ஜூன் 23, 2021 அன்று புதன் ரிஷப ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகிறார்
• செவ்வாய் ஜூன் 2, 2021 முதல் கடக ராசியில் சஞ்சரிப்பார்
• சுக்கிரன் இந்த மாதத்தின் தொடக்கத்தில் மிதுன ராசியில் சஞ்சரித்து அதன் பின்னர் கடக ராசிக்கு ஜூன் 22, 2021 அன்று பெயருகிறார்
• ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்
மே 23, 2021 முதல் சனி பகவான் வக்கிர கதி அடைவார். ஜூன் 2௦, 2021 அன்று குருவும் வக்கிர கதி அடைவார். சுவாரசியமாக, ஜூன் 2௦, 2021 முதல் சனி பகவான், குரு மற்றும் புதன் மூன்று நாட்களுக்கு வக்கிர கதி அடைவார்கள். குரு மற்றும் சனிபகவான் ஆகிய இரண்டு முக்கிய கிரகங்கள் வக்கிர கதி அடைவதால் ஏற்படும் தாக்கத்தால் மக்களுக்கு அதிர்ஷ்டங்களில் பெரும் அளவு மாற்றங்கள் ஏற்படும்.
நல்ல செய்தி என்னவென்றால், கோவிட் – 19 ஜூன் 2௦, 2021 முதல் கட்டுப்பாட்டிற்குள் வரும். இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் 2021 ஆகிய மாதங்களில் அடுத்த அலையின் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால் நாம் கவனமாக இருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் கோவிட் – 19 பருவகாலம் போல வரும் என்பதால், நாம் தடுப்பூசி எடுத்துக் கொண்டு விடயங்களை சமாளித்து, கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
Prev Topic
Next Topic