![]() | 2021 June ஜூன் மாத காதல் ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | காதல் |
காதல்
சுக்கிரன் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், நீங்கள் காதலிப்பவருடன் நீங்கள் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். ஆனால் செவ்வாய் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பதற்றத்தை அதிகரிப்பார். நீங்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதால், உளவியல் ரீதியாக மேலும் பின்னடைவுகளை நீங்கள் சந்திக்க நேரலாம். உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் கலவையான பலன்களை சந்திப்பீர்கள். புது உறவைத் தொடங்க இது ஏற்ற நேரம் இல்லை. அக்டோபர் 2021 தொடக்கம் வரை காத்திருப்பது நல்லது.
திருமணம் ஆன தம்பதியினர் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இயற்கையாகவே நீங்கள் குழந்தை பேறுக்குத் திட்டமிடலாம். IVF அல்லது IUI போன்ற மருத்துவ சிகிச்சைகளை தவிர்த்து விடுவது நல்லது. அது நீங்கள் எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களால் எந்த முன்னேற்றத்தையும் இப்போது உங்கள் முயற்சியில் காண முடியாது.
Prev Topic
Next Topic



















