![]() | 2021 June ஜூன் மாத உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | உடல் நலம் |
உடல் நலம்
உயர் இரத்த அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக நீங்கள் கடந்த மாதம் உடல் உபாதைகளை சந்தித்திருந்திருப்பீர்கள். இந்த மாதம் செவ்வாய் மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் விடயங்கள் அமைதியாகும். குரு மற்றும் சுக்கிரன் ஐந்தாம் பார்வையாய் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்கள். உங்களுக்கு எளிமையான மருந்து கிடைத்து நீண்ட காலமாக உங்களுக்கு இருந்த உடல் நல பிரச்சனையில் இருந்து வெளியில் வருவீர்கள். நீங்கள் விரைவாக குணமடைவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
நீங்கள் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் ஜூன் 21, 2021 க்கு மேல் பாதிக்கப்படலாம். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொண்டு, மன அமைதியையும் பெற முயற்சிக்க வேண்டும்.
Prev Topic
Next Topic



















