![]() | 2021 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
ஜூன் 2021 கன்னி ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். புதன் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். ராகு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. கேது உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல உதவிகளை செய்வார். சுக்கிரன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் ஜூன் 2, 2021 முதல் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார்.
செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உடல் நலத்தை மீண்டும் பெற உதவி செய்வார். சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். குரு ஜூன் 2௦, 2021 அன்று வக்கிர கதி அடைவதால், உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.
மொத்தத்தில் இந்த மாதத்தின் தொடக்கம் சிறப்பாக இல்லை. நீங்கள் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இந்த மாதம் நாட்கள் முன்னேற பெரும் அளவு முன்னேற்றத்தை காண்பீர்கள். ஜூன் 22, 2021 முதல் நீங்கள் நல்ல பலன்களைக் காணத் தொடங்குவீர்கள்.
Prev Topic
Next Topic



















