![]() | 2021 June ஜூன் மாத பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம் மற்றும் குடியேற்றம்
புதன் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவதால் நீங்கள் முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.இறுதி நிமிடத்தில் உங்கள் பயணம் ரத்தாவதால், அல்லது பயண திட்டங்களில் மாற்றம் ஏற்படுவதால் பயண செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் பயணத்தின் போது உங்களுக்கு ஜூன் 22, 2021 வரை பிரச்சனைகளை உண்டாக்குவார். ஜூன் 22, 2021க்கு மேல் பயணம் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும்.
நிலுவையில் இருக்கும் உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் RFEயிடம் தேக்கம் அடையும். விசா பெரும் விடயங்களில் அதிக தாமதங்கள் ஏற்படலாம். அப்படி தாமதமாவது நல்லதுக்கே என்று நம்புங்கள். ஜூன் 22, 2021 வாக்கில் உங்களுக்கு நேர்மறை பலன்கள் உங்கள் விசா குறித்த விடயங்களில் ஏற்படத் தொடங்கும். நீங்கள் விசா ஸ்டம்பிங் செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஜூன் 22, 2021 வரை காத்திருப்பது நல்லது.
Prev Topic
Next Topic



















