![]() | 2021 March மார்ச் மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
அடுத்த 5 வாரங்களில் குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயர்ந்து 3௦ டிகிரி கோணத்தை முழுமையாக முடிப்பார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு சவால் நிறைந்த காலமாக இருக்கும். அலுவலகத்தில் நடக்கும் அரசியில் இந்த மாதம் உச்சத்தில் இருக்கும். அலுவலக அரசியலால் நீங்கள் மிகவும் பாதிக்கப்படுவீர்கள்.
நீங்கள் கவனமாக இல்லை என்றால், மார்ச் 17\, 2021 முதல் மார்ச் 31, 2021 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் அவமானப் படும் சூழல் ஏற்படலாம். பெண்கள், மேலாளர்கள் மற்றும் இளம் வயதினர்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஏற்படும் மன பிரச்சனைகள் மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் மார்ச் 25, 2021 வாக்கில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை ராஜினாமா செய்து விடலாமா என்றும் கூட நினைப்பீர்கள்.
நீங்கள் நிர்வாகத் துறையில் இருப்பவர் என்றால், உங்களுக்கு அதிக பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணி செய்பவர்கள் உங்களைப் பற்றி உங்கள் எச் ஆரிடம் புகார் கூருவாகள். உங்கள் மீது தவறு இல்லை என்றாலும், நீங்கள் குற்றம் சாட்டப்படுவீர்கள். நீங்கள் மிகவும் பொறுமையாக இருந்து இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். எந்த வளர்ச்சியையும் எதிர்பார்க்காமல், தற்போது இருக்கும் நிலையிலேயே நீங்கள் உங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்வது நல்லது.
Prev Topic
Next Topic



















