![]() | 2021 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மார்ச் 2021 சிம்ம ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. செவ்வாய் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் மனக் கவலை மற்றும் பதற்றத்தை அதிகரிப்பார். சுக்கிரன் மார்ச் 17, 2021 வரை உங்கள் உறவுகள் குறித்த விடயங்களில் பிரச்சனைகளை உண்டாக்குவார். புதன் தெளிவு இல்லாத நிலையில் அதிக குழப்பங்களை உங்களுக்கு உண்டாக்குவார். உங்களால் ராகு மற்றும் கேதுவிடம் இருந்து எந்த நல்ல பலனையும் எதிர்பார்க்க முடியாது.
சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து குறுகிய காலத்திற்கு உங்களுக்கு இழப்புகளை உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்களுக்கு பாதுகாப்பை தந்தாலும், அது நீண்ட காலத்திற்கு மட்டும் தான். சனி பகவானிடம் இருந்து கிடைக்கும் நேர்மறை சக்த்திகளை விட குருவிடம் இருந்து கிடைக்கும் பிரச்சனைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு ஒரு மோசமான மாதமாக இருக்கும் என்பதை இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த சோதனை காலம் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே. ஏப்ரல் 2021 முதல் நீங்கள் ஆச்சரியத் தக்க மாற்றங்களை காண்பீர்கள். நீங்கள் எதை செய்தாலும், ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செயல்படுவது நல்லது. மூச்சு பயிற்சி செய்து நேர்மறை சக்த்திகளை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
Prev Topic
Next Topic



















