![]() | 2021 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மார்ச் 2021 மீன ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இல்லை. சுக்கிரன் உச்சம் பெறுவதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். புதன் உங்களுக்கு நிதி வளர்ச்சியில் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கு சிறப்பான உதவியை செய்வார். செவ்வாய் மற்றும் ராகு இணைந்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்கள். உங்கள் வாழ் நாளிலேயே இந்த மாதம் ஒரு சிறப்பான மாதமாக இருக்கும்.
சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்கி விண்ணைத் தொடும் லாபத்தை தருவார்கள். உங்களுக்கு நல்ல பண மழை பொழியும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்கள் வாழ்க்கையிலேயே நீங்கள் முதல் முறையாக ஒரு கோட்டீஸ்வரரானாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆனால் அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலமும் இருக்க வேண்டும்.
அடுத்த 5 வாரங்களுக்கு இந்த அனைத்து அதிர்ஷ்டமும் உங்களுக்கு எந்த பின்னடைவுகளும் இல்லாமல் கிடைக்கும். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும், புகழையும் பெரும். உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கவில்லை என்றால், உங்கள் பிறந்த சாதகத்தை நீங்கள் பார்க்க வேண்டும். உங்கள் சோதிடரை அணுகி உங்களுக்கு எது பிரச்சனையை உண்டாக்குகின்றது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 5, 2021 அன்று பெயர்ந்த பிறகு உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம். ஆனால் அது உங்கள் வளர்ச்சியை பாதிக்காது.
Prev Topic
Next Topic



















