![]() | 2021 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மார்ச் 2021 விருச்சிக ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும், 5ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உங்களால் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. சுக்கிரன் இந்த மாதம் முழுவதும் நல்ல நிலையில் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் நாட்கள் நகர நகர புதன் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். கேது உங்கள் ஜென்ம ராசியிலும், ராகு களத்திற ஸ்தானத்திலும் சஞ்சரித்து உங்கள் உறவுகள் குறித்த விடயங்களில் பிரச்சனைகளை உண்டாக்குவார்கள்.
செவ்வாய் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு தேவையற்ற பதற்றம் மற்றும் பயத்தை உண்டாக்குவார். குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு ஒரு பலவீனமான விடயமாகும். இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் குறைவாகவே இருக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளை நீங்கள் குறைவாகவே வைத்திருக்க வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் உறவுகள், உத்தியோகம் மற்றும் நிதி நிலை குறித்த விடயங்களில் அதிக பிரச்சனைகள் ஏற்படலாம்.
இருப்பினும், உங்களுக்கு இந்த சோதனை காலம் குறைந்த காலகட்டத்திற்கு மட்டுமே. மேலும் சனி பகவான் இந்த மாதம் முழுவதும் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறி போகாது. ஏப்ரல் 2021க்கு மேல் உங்களுக்கு சிறப்பான வளர்ச்சி உண்டாகும். நீங்கள் எதை செய்தாலும் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. மூச்சு பயிற்சி செய்து நேர்மறை சக்த்திகளை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
Prev Topic
Next Topic



















