![]() | 2021 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மார்ச் 2021 ரிஷப ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். சுக்கிரன் மார்ச் 17, 2021 முதல் நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். புதன் உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றியை அதிகரிப்பார். செவ்வாய் மற்றும் ராகு இணைந்து உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ஒரு பலவீனமான விடயமாகும். இந்த சஞ்சாரம் உங்களை உளவியல் ரீதியாக பாதிக்கக் கூடும், ஆனால் நீங்கள் தொடர்ந்து பெரும் அளவு வெற்றியைக் காண்பீர்கள்.
சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்களுக்கு பொற்காலத்தை இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் கொண்டு வருவார்கள். குரு செவ்வாய் மற்றும் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இணைந்து சஞ்சரித்து உண்டாக்கும் தாக்கங்களை குறைப்பார். மொத்தத்தில் நீங்கள் எதை செய்தாலும், அதில் பெரும் அளவு வெற்றியை காண்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு வரவிருக்கும் வாய்ப்புகளை பற்றிக் கொண்டு நீங்கள் உங்கள் வால்ககியில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள்.
இந்த மாதமே சுப காரியங்களை செய்து விடுவது நல்ல யோசனையாக இருக்கும், ஏனென்றால், ஏப்ரல் 5, 2021 அன்று நடக்க இருக்கும் அடுத்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இல்லை. நீங்கள் மூச்சு பயிற்சி செய்து நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பெருமாளை வணங்கி நிதி நிலையில் பெரும் அளவு வெற்றியைப் பெறுங்கள்.
Prev Topic
Next Topic



















