![]() | 2021 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மே 2021 கடக ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 1௦ஆம் வீடு மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், இந்த அமாதம் முழுவதும் உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் சிறப்பாக உள்ளது. ஆனால் செவ்வாய் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு தேவையற்ற பயமும், பதற்றமும் ஏற்படலாம்.
உங்களுக்கு ஒரு பலவீனமான விடயம் என்னவென்றால், குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது தான். இதனால் பெரும் அளவு பின்னடைவுகள் உங்கள் முயற்சிகளில் ஏற்படலாம். மேலும் குரு கண்டாக சனியின் தாக்கத்தை அதிகரிக்கலாம். இதனால் உங்களுக்கு உறவுகளுடன் பிரச்சனைகள் ஏற்பட்டு, மன உளைச்சல் ஏற்படலாம்.
ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு உதவிகளை செய்வார். முக்கிய கிரகங்கள் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். ஆனால் அதிகரிக்கும் குடும்ப மற்றும் அலுவலக அரசியலால் உங்கள் மன ஆரோக்கியம் நலம் பாதிக்கக் கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic



















