![]() | 2021 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மே 2021 மகர ராசி பலங்கள்
சூரியன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நல்ல பலன்களை .எதிர்பார்க்க முடியாது. ராகு மற்றும் புதன் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்ப வாழ்க்கையில் தொடர்பு குறித்த பிரச்சனைகளை உண்டாக்குவார்கள். ஆனால், சுக்கிரன் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து புதன் மற்றும் ராகு உண்டாக்கும் எதிர்மறை சக்திகளை இல்லாமல் செய்து விடுவார்.
செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து அதிக செல்வங்களையும், அதிக பண வரத்தையும் உண்டாக்குவார். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் ஜென்ம சனியின் தாக்கம் இந்த மாதம் பெரும் அளவு குறையும்.
நீண்ட சோதனை காலத்திற்கு பிறகு இது உங்களுக்கு ஒரு சிறப்பான மாதமாக இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். உங்கள் முயற்சிக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து நேர்மறை சக்திகளை விரைவாக பெற முயற்சி செய்யுங்கள். இந்த மாதத்தை சிறப்பாக பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic



















