![]() | 2021 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மே 2021 மிதுன ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கும், 12ஆம் வீட்டிற்கும் பெயருவதால் இந்த மாதத்தின் முதல் பாதியில் நீங்கள் நல்லப் பலன்களைப் பெறுவீர்கள். சுக்கிரன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு பெயருவதால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படலாம். கேது உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உத்தியோகம் போன்ற விடயங்களில் சிறப்பான பலன்களைத் தருவார். புதன் இந்த மாதம் உங்களுக்கு கலவையானப் பலன்களைத் தருவார்.
ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு மனக் கவலை உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பதற்றம் ஏற்படலாம். ஆனால் குரு உங்கள் ஜென்ம ராசி மற்றும் செவ்வாயை பார்வை இடுவதால், உங்களுக்கு சிறப்பான வளர்ச்சியும், வெற்றியும் உண்டாகும். சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம்.
இந்த மாதம் உங்களுக்கு அதிக பதற்றம் நிறைந்ததாக இருந்தாலும், நல்ல முன்னேற்றம் தரக்கூடிய மாதமாக இருக்கும். நீங்கள் இந்த மாதத்தின் இறுதி வாரத்தில், மே 24, 2021 வாக்கில் பெரிய அளவில் வெற்றியையும், சிறப்பான அதிர்ஷ்டத்தையும் பெறுவீர்கள். மூச்சு பயிற்சி செய்து நீங்கள் விரைவாக நேர்மறை சக்திகளைப் பெற முயற்சிக்கலாம்.
Prev Topic
Next Topic



















