![]() | 2021 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மே 2021 மீன ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் நல்ல பலன்களைத் தருவார். ராகு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார். புதன் உங்களுக்கு இந்த மாதம் கலவையான பலன்களைத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் அலுவலாகத்தில் சற்று பதற்றமான சூழல் நிலவலாம்.
சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நீண்ட கால அடிப்படையில் வெற்றியைத் தருவார். குரு உங்கள் ராசியின் 12வீட்டில் சஞ்சரித்து சுப விரைய செலவுகளை அதிகரிப்பார். ஆனால், உங்கள் நீண்ட கால வளர்ச்சியும், வெற்றியின் விகிதமும் பாதிக்கப்படாது. உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி பணத்தை சேமிக்க முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்கும்.
அடுத்த சில வாரங்களுக்கு உங்களுக்கு நல்ல வெற்றி தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும். ஆனால் நேர்மறை சக்தியின் அளவு இந்த மாதத்தின் இறுதி பகுதியில் சற்று குறையும். மே 21, 2021க்கு முன் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செட்டிலாகி விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Prev Topic
Next Topic



















