![]() | 2021 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மே 2021 தனுசு ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 5 மற்றும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். புதன் தொடர்ந்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், கேது உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நிதி பிரச்சனைகளை அதிகரிப்பார். மேலும் குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் அனேக நேரங்களில் உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் உண்டாகலாம். மே 20, 2021 வாக்கில் உங்களுக்கு சாதகமற்ற செய்திகள் வரலாம்.
மே 1௦, 2021 முதல் ஏழரை சனியின் பாதகமான தாக்கங்கள் இந்த மாதம் மிகவும் அதிகமாக உணரப்படும். நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். உங்களுக்கு உங்கள் வாழ்க்கையின் பல விடயங்களிலும் பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் அடுத்த 7 வாரங்களுக்கு சோதனை காலத்தில் இருப்பீர்கள். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic



















