![]() | 2021 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மே 2021 ரிஷப ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், இந்த மாதம் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். ஆனால் புதன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உடல் நல பிரச்சனைகள் உண்டாகலாம். ராகு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு உடல் உபாதைகளை அதிகரிக்கக் கூடும். கேது உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திற ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு உறவுகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தை பாதிப்பார். குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உத்தியோக வாழ்க்கையை மிக அதிகமாக பாதிப்பார். செவ்வாய் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்களை உண்டாக்கலாம். எதிர்பாராவிதமாக, இந்த மாதம் உங்களுக்கு மற்றுமொரு கடுமையான சோதனை காலமாக இருக்கும்.
முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்திப்பது நல்லது. நீங்கள் மூச்சு பயிற்சி செய்து, சுதர்சன மகா மந்திரம் கேட்டு வந்தால் சற்று ஆறுதலாக இருக்கும். பெருமாளை வணங்கி உங்கள் நிதி பிரச்சனைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
Prev Topic
Next Topic



















