![]() | 2021 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
நவம்பர் 2021 மேஷ ராசிப் பலன்கள். சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8 ஆம் வீட்டிற்கு பெயர்வது இந்த மாதம் முழுவதும் சாதகமற்ற நிலையை காட்டுகின்றது. சுக்கிரன் உங்கள் ராசியின் 9 ஆம் வீடான பாகிய ஸ்தானத்தில் சஞ்சரித்து இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சிறப்பான பலனைத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும், ஆனால் இதனால் உங்கள் அதிர்ஷ்டம் பாதிக்கப்படாது.
சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அதிக வேலை பளு மற்றும் பதற்றம் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கு இருக்கலாம். இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களுக்கு உங்களால் நல்ல பலனை புதனிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. ராகு மற்றும் கேதுவிடம் இருந்து உங்களால் பலன்களை எதிர்பார்க்க முடியாது.
குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து நவம்பர் 21, 2021 முதல் உங்களுக்கு பண மழையைப் பொலிவார். இந்த மாதத்தின் தொடக்கம் அவ்வளவாக சிறப்பாக இல்லை என்றாலும், நவம்பர் 21, 2021 முதல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கத் தொடங்கும். இந்த மாதத்தின் இறுதியில் உங்களுக்கு ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகளால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.
உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், எந்த இடைவெளியும் இல்லாமல் அடுத்த 6 மாதங்களுக்கு நேரம் சிறப்பாக உள்ளது என்பது தான். சனி பகவானின் பாதகமான தாக்கங்கள் நவம்பர் 21, 2021 முதல் குறையும். அடுத்த 6 மாதங்களைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாக முயற்சி செய்யலாம்.
Prev Topic
Next Topic



















